சிங்களக்குடியேற்றம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது – கைவிரிக்கிறார் யாழ். அரச அதிபர்

Arumainaajakamநாவற்குழியிலுள்ள அரச காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென்று கைவிரித்தார் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நண்பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணி சிங்கள மக்களுக்கு எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றது என்று ஊடகவியலாளர்கள் அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக் கையிலேயே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாவற்குழியிலுள்ள குறித்த அரச காணி வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுப்பதற்காகத் தேசிய வீடமைப்பு அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த காணியைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் எனக்கு எதுவும் இதுவரையில் அறியத் தரப்படவில்லை.குறித்த காணி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமானது. அந்தக் காணிக்கான பொறுப்பு அவர்களுடையது. இந்தக் காணியை பங்கீடு செய்வதற்கு காணிக் கச்சேரி நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை.இருப்பினும் குறித்த காணி வீடமைப்புத் திட்டத்துக்காகவே தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது குறித்த காணியைக் குடியேற்றத் திட்டத்துக்கே தேசிய வீடமைப்பு அதிகாரசபை பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply