நயன்தாராவுக்கு ஏன் இப்படி ஒரு சோதனை ?

nayantara2இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கிய நயன்தாரா தோல் சம்மந்தமான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தாலும், தனக்கு ஏற்றவாறு தெரிவு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் நயன் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாராம், இதற்கு காரணம் ஓவராக மேக்கப் போடுவது தானாம்.

குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்டால் நயனின் தோல் அலர்ஜி பிரச்சனை அதிகரித்து விடுகிறதாம். இந்த பிரச்சனைக்கு அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

இதேபோன்று அவதிப்பட்டு வந்த சமந்தாவும் 3 மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply