புதுமையாக நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று இருக்கின்ற தமிழை கொலை மேல் கொலை செய்து தமிழை மறக்கடிக்கிற வேலையை பிக் எப்.எம்மில் தவறாமல் செய்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி.
சினிமாவின் சூத்திரதாரியே இவர் தான் என்பது போல எந்தப்படத்தை விமர்சனம் செய்தாலும் திட்டுவாரே தவிர மறந்தும் கூட ஒருவரி பாராட்ட மாட்டார்.
இவர் நிகழ்ச்சிகளில் பல நல்ல படங்களை மொக்கை படங்கள் என்று நக்கலடித்து, விமர்சனம் செய்து பிறகு சம்பந்தப்பட்ட டைரக்டர்களிடம், ஹீரோக்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்ட கதைகள் ஏராளம் உண்டு.
ஆனால் எல்லா டைரக்டர்களும், ஹீரோக்களும் அப்படி இருப்பார்களா என்ன? அப்படித்தான் தீபாவளிக்கு ரிலீசான படங்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களின் விமர்சனங்களை போன் மூலம் ஒலிபரப்பு செய்து விஷாலின் கோபப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.
அவருடைய நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கருத்துகளை சொன்னால் அதை கட் செய்யாமல் ஒலிபரப்பு செய்வார்கள் என்பது தான் வழக்கமான நேயர்களுக்கு தெரியுமே? அதனால் தீபாவளிப் படங்களைப் பற்றிய கருத்துகளைச் சொன்ன நேயர்கள் எல்லோருமே பாலாஜி எதிர்பார்த்தது போலவே கண்டமேனிக்கு திட்டித் தீர்த்திருக்கிறார்கள். அதிலும் கார்த்தியின் அழகுராஜா படத்துக்கான விமர்சனங்கள் எல்லாமே கொஞ்சம் ஓவராக இருந்ததாம்.
விடுவாரா விஷால்; கடுப்பானவர் பாலாஜிக்கு போனைப் போட்டு லெப்ட் ரைட் வாங்க “இனி சினிமா நிகழ்ச்சியே நான் பண்ணப் போறதில்லை” என்று ஜகா வாங்கியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இந்த விவகாரம் பற்றி தனது சகாக்களிடம் பேசிய விஷால் “அந்தப்பையனுக்கு வாய் கொஞ்சம் ஓவர், அதென்ன எந்தப்படத்தை விமர்சனம் பண்ணினாலும் திட்டுறான்” என்று கடுப்பானாராம்.
இருந்தாலும் மீடியாவாச்சே..? எதற்கும் கொஞ்சம் சமாதானம் சொல்லி வைப்போம் என்று ‘போலி விமர்சகரான ஆர்ஜே பாலாஜி (Dear Mr.so called critic RJ Balaji), இப்போதுதான் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பற்றிய உங்களின் கமெண்ட் பற்றி தெரிய வந்தது. விமர்சனம் என்பது பொதுவானது, ஆனால், நீங்கள் தரக்குறைவாக பேசவில்லை என நினைக்கிறோம்.’ என ட்வீட் செய்திருக்கிறார் விஷால்.
அதானே அதென்ன எந்த படத்தை விமர்சனம் செய்தாலும் மொக்கைன்னு சொல்றீங்க பாலாஜி?
















