‘வெற்றி விழா நடத்துங்கள்; வீரவாள் வாங்கிக் கொள்கிறேன்’ : அமீரிடம் ‘அம்மா’ வைத்த கோரிக்கை!

ameerஊதிய உயர்வு, இலவச வீடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்சி உறுப்பினர்கள் இன்று கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். முதலமைச்சரை சந்தித்த பின் பேரணிக்கு தலைமை தாங்கிய ‘பெப்சி’ அமைப்பின் தலைவரும், டைரக்டருமான அமீர் “என்னால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ? அதையெல்லாம் கண்டிப்பாக செய்கிறேன்” என்று முதல்வர் சொன்னதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :

பெப்சி தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரை இன்று சந்தித்தோம். எங்கள் குறைகளை தாய் உள்ளத்தோடு கூர்ந்து கேட்டார். சம்பள உயர்வு, படப்பிடிப்பு தளங்களில் உள்ள பிரச்சினைகள், சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை எடுத்து கூறினோம். அவற்றை படித்து பார்த்து என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ? அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என்றார்.

எங்கள் கோரிக்கை வெற்றி விழாவை கலை நிகழ்ச்சியுடன், பெரிய விழாவாக நாங்கள் நடத்த உள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு பள்ளிக் கரணையில் 85 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அம்மாதான். அது சதுப்பு நிலம் என்பதால் வேறு இடம் கேட்டிருக்கிறோம். இதன் மூலம் ‘பெப்சி’யில் அங்கம் வகிக்கும் 23 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார் அமீர்.

முன்னதாக டைரக்டர் அமீர் அம்மாவை சந்தித்தபோது அவருக்கு வீரவாளை பரிசாக கொடுத்தாராம். அதற்கு அவர் இந்த வாள் இப்போது வேண்டாம். வெற்றி விழா நடத்துங்கள்; அப்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விட்டாராம்.

அமீரும் கோரிக்கைகள் வைக்கப்போன தன்னிடமே அம்மா ஒரு கோரிக்கை வைத்ததை எண்ணி மகிழ்ந்து வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை விரைந்து ஆரம்பிக்கச் சொல்லி சங்க உறுப்பினர்களை முடிக்கி விட்டிருக்கிறார்.

Tags: ,

Leave a Reply