விண்வெளியில் லேடி ககாவின் இசை நிகழ்ச்சி

lady-gagaபாப் பாடகி லேடி ககா விண்வெளியில் பாடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி லேடி ககா. இவர் உலக நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் முதல் முறையாக விண்வெளியில் பாடல் பாடி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சி 2015–ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்டு பிரான்சன் ராக்கெட்டில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறார்.

அதில், பாடகி லேடி ககாவும் பங்கேற்று விண்வெளி செல்கிறார். அதைத்தொடர்ந்து அங்கு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் பாடுகிறார்.

அதற்காக சுமார் ஒரு மாதம் பாடும் பயிற்சி மேற்கொள்கிறார். இத்தகவல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply