பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும்போது அவர்களிடம் நாகரீகம் எதிர்பார்ப்பது தான் அங்குள்ள பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
ஆனால் இன்று நடந்த ஆடியோ பங்ஷனில் சந்தர்ப்பம் கிடைத்தால் பிரபலங்கள் கூட மேடைகளில் கெட்ட வார்த்தைகள் பேசுவது எப்படி? என்று கே.பாலச்சந்தர் உட்பட பல பிரபலங்களுக்கு ட்யூஷன் எடுத்து விட்டுப் போனார் சின்னத்திரை ‘சித்தி…………….’ ராதிகா.
அவருடைய கோபமே சமீபகாலமாக ரிலீசாகும் படங்களின் மீது தான் இருந்தது. அதேநேரம் அவர் பாராட்ட வந்ததும் இனி ரிலீசாகப் போகும் ஒரு புதிய படத்தை தான்.
சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா டைரக்ஷனில் தயாராகியிருக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் ஆடியோ பங்ஷன் இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
9 மணிக்கு பங்ஷனுக்கு ஹாயாக 11 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார் உலகநாயகன் கமல். நல்லவேளை அதற்குள் ராதிகா பேசி முடித்து விட்டார். அவர் இருக்கும் போது பேசியிருந்தாலும் கமல் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். அது வேறு விஷயம்.
ஆனால் அதே மேடையில் இருந்த கே.பாலச்சந்தரும் அமைதியாக இருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை வயதாகி விட்டதால் ராதிகாவின் பேச்சை அவர் கவனித்திருக்க மாட்டார் போலும்.
வந்தவுடன் மைக்கைப் பிடித்த ராதிகா ஸ்ரீப்ரியாவை வாழ்த்திப் பேசிவிட்டு தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டை கலாய்க்க ஆரம்பித்தார்.
“ சமீபகாலமா நான் தியேட்டர்ல போய் எல்லாப் படங்களையும் பார்ப்பேன். எல்லாப் படங்களும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. காலையில எந்திரிச்ச உடனே “டேய் மச்சான், இன்னைக்கு எந்தப் பொண்ணை சைட்டடிக்கலாம்னு” ஹீரோ கேட்கிறான். அதுக்கு அவங்கூட இருக்கிற ஆள் “டேய் மச்சா இந்த தெருவுல ஒரு பொண்ணு இருக்காடா”ன்னு சொல்றான்.
malini 22 palayamkottai audio launch stills 87d130a கெட்ட வார்த்தை பேசுறது எப்படி? : ஆடியோ பங்ஷனில் ட்யூஷன் எடுத்த ராதிகா சித்தி………………….!!!
அப்புறம் முன்பெல்லாம் ஒரு படத்துல கண்டிப்பா சில்க்ஸ்மிதாவோட கவர்ச்சி டான்ஸ் இருக்கும், அதேமாதிரி இப்போ வர்ற எல்லாப் படங்கள்லேயும் கண்டிப்பா ஒரு டாஸ்மாக் சீன் இருக்கு. அங்கதான் ஹீரோ அவரோட ப்ரெண்டுக்கிட்ட “மச்சா அந்தப்பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா”ன்னு பீல் பண்ணுவார்.
அப்புறம் அந்த ஹீரோ காலையில எந்திரிச்ச உடனே “டேய் பாடு…என்னடா பொத்திக்கிட்டு போடா…”ன்னு அப்பாவை திட்டுறான். அந்தளவுக்கு ரொம்ப உணர்ச்சிப்பூர்வமா இப்போ வர்ற படங்கள் இருக்கு. இந்த மாதிரி சீன்களையெல்லாம் சில பேர் ரசிக்கிறாங்க, சில பேர் ரசிக்க மாட்டேங்கிறாங்க… பட் எல்லாப் படங்கள்லேயும் இதே கதைதான் வந்துக்கிட்டிருக்கு.
எல்லாப்படங்களிலும் மொழு மொழுன்னு வெள்ளையா தமிழே பேசத் தெரியாத ஒரு பொண்ணு வருவா, அந்தப்பொண்ணை ஹீரோ விரட்டி விரட்டி லவ் பண்ணுவார், வெரி நைஸ் இப்படித்தான் படங்கள் இருக்கு. அதே நேரத்துல சூது கவ்வும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரியான சில படங்களும் ரிலீஸ் ஆகுது… என்று இப்படி ஒரு பப்ளிக் பங்ஷனில் கெட்ட வார்த்தைகளை பேசுகிறோமே? என்ற எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சிரித்துக் கொண்டே பேசிவிட்டுப்போனார் ராதிகா சித்தி………………
ராதிகாவின் இந்தக் கலாய்த்தல் பேச்சை ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் குமுதாவை துரத்தி துரத்தி காதலித்த விஜய் சேதுபதியும் அதே மேடையில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டு தான் இருந்தார்.
















