இளவேனில் பாலர் பாடசலையின் கலைவிழா!

வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலை மற்றும் பகல் பராமரிப்பு நிலையத்தின் இவ் ஆண்டு கலை விழா இன்று(09) சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

பாடசாலையின் அதிபர் திருமதி தமயந்தி ஜெயரட்னாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் செல்வி.உமா இராசசையாவும் கௌரவ விருந்தினராக நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நாவலனும் கலந்து கொண்டிருந்தனர். சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

Tags: , , , ,

Leave a Reply