வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நடைபெறுவதற்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அமர்விற்கு முன்பதாக இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் முதலமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
















