பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் விசேட விமானம் மூலம் புதன்கிழமை கொழும்பை வந்தடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரதிநிதிகள் குழுவின் தலைவரான வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் வெளிவிவகார செயலாளர் சுயாதா சிங் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் வரவுள்ளனர் என இலங்கைக்கான இந்திய தூதுவ அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை கூறினார்.
இதே விமானத்தில் இந்தியாவின் பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் பயணிப்பர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
















