இதைப் பார்த்தாவது காமக்கொடூரன்கள் திருந்தட்டும் – ஸ்வேதாமேனன் ஆவேசம்

shwetha-menonஒரு பெண் தாயாவது எவ்வளவு வலி மிகுந்தது என்றும், அப்படிப்பட்ட காட்சிகளை பார்த்தாவது நாட்டில் காமக்கொடூரன்கள் திருந்தட்டும் என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் பிரபல மலையாள நடிகை ஸ்வேதாமேனன்.

எத்தனையோ ஹிட் படங்களிலும் நடித்திருந்தாலும் 2011- ஆம் ரிலீசான ‘ரதி நிர்வேதம்’ என்ற 11 மணிக்காட்சி படத்தில் தான் ரசிகர்களிடையே பிரபலமானார் ஸ்வேதாமேனன்.

இன்றும் கூட அந்தப் படத்தை தமிழகத்திலுள்ள பிட்டு பட தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரரான ஸ்வேதாமேனன் மலையாளத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளான படம் தான் ‘களிமண்’.

அவருடன் பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்காக ஒரு பிரசவ காட்சியை படமாக்க நினைத்தார் டைரக்டர் பிளெஸ்ஸி.

இதற்காக திருமணத்துக்குப் பிறகு நிஜமாக தாயான நடிகை ஸ்வேதாமேனன் தனது பிரசவக் காட்சியை படம் பிடிக்க டைரக்டர் பெர்மிஷன் கொடுத்தார். அதன்படி அவரது பிரசவக் காட்சிகள் படமாக்கப்பட்டு இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டது.

Tags: ,

Leave a Reply