பொதுநலவாய மாநாடும் அம்பலமாகும் இலங்கையும்…

bbc1BBC செய்தியாளர் குழுவை சுதந்திரமாக இயங்க விடாது தடுத்து சர்வதேச ரீதியாக அம்பலப்பட்டார்கள்.

காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு செய்திகளை சேகரிப்பதிலும் படம்பிடிப்பதிலும் பாரிய சிக்கல்களைச் சந்தித்துள்ளதாக படப்பிடிப்பாளர் குழு அறிவித்துள்ளது.

மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயலஇ இலங்கை அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.

‘எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள்’ என பிபிசி செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள். இது குறித்து ஜேம்ஸ் றொபின்ஸ் குறிப்பிடுகையில் ‘இலங்கையில் ஊடக சுதந்திரம் காணப்படுவதாக கூறுகிறார்கள் ஆனால் ஒரு படம் எடுப்பதற்கு கூட எம்மை அனுமதிக்கிறார்கள் இல்லை. எமது படப்பிடிப்பாளர் டங்கனை பின்னிருந்து அதிகாரிகள் தள்ளுகிறார்கள். ஒளிப்படக் கருவியை இழுத்து தடுக்கிறார்கள் என தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply