மனச்சிக்கல் வந்தா ருத்ரன் மாதிரியான டாக்டர்கள்கிட்ட போகலாம், ஆனா பணச்சிக்கல் வந்தா யார்கிட்டே போறது? கிட்டத்தட்ட அப்படி ஒரு கண்டிஷன்ல தான் இருந்தார் டைரக்டர் கவுதம் மேனன்.
சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சி பல கோடிகளை நஷ்டமாக பார்த்த கவுதம்மேனனுக்கு அதிலிந்து மீண்டு வர்றதுக்கே சூர்யா மாதிரியான ஹீரோக்களுக்கு குட்பை சொல்ல வேண்டியதாயிடுச்சு.
இப்போ சிம்புவை வெச்சி ஃசைலண்ட்டா ஒரு படத்தை ஆரம்பிச்சிருக்கிற கவுதம்மேனன் டே அண்ட் நைட்டா சிம்புவை தூங்க விடாம வேலை வாங்குறாராம். (இதெல்லாம் சிம்புவுக்கு அலர்ஜியாச்சே..?) மிகவிரைவில் படம் முடியப்போகிறதாம்.
ஒரு வருஷம் கேப்புக்கப்புறம் இந்தப்படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிச்சிருக்கேன்னு உற்சாகம் காட்டுற கவுதம் அடுத்து அஜித்தை வெச்சு ஒரு படத்தை டைரக்ட் பண்ணப் போகிறார். அஜித் வந்தா உடனே ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிடுவாராம் கவுதம் மேனன்.
இப்போ அஜித்துக்காக கவுதம் வெயிட்டிங். இதுக்கிடையில கௌதம் மேனன் ‘போடா போடி’ படத்தோட டைரக்டர் விக்னேஷ் சிவன் டைரக்ஷன்ல நானும் ரவுடிதான்கிற ஒரு படத்தை தயாரிக்கி்றார். ஜனவரி மாசம் ஸ்டார்ட்டாகப் போற இந்தப்படத்துல கவுதம் கார்த்திக் தான் ஹீரோ.
















