அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புனர்வாழ்வு அமைப்பு (ADVRO) அண்மையில் ஒரு கலைவிழாவை நடத்தியிருந்தது. மண்டபம் நிறைய ஆதரவாளர்கள் வந்து பக்க பலமாக ஒத்துழைத்தார்கள். தலைவர் டாக்டர் பெரியசாமி, சிறப்பு விருந்தினர் களான டாக்டர் பாலா கனகசபை, பெஞ்சமின் பாலா அவர்கள் அமைப்பின் சேவைகளுக்குத் தடங்கலான விடயங்கள் பற்றி உரையாற்றினார்கள்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரை அமைப்பு பாதுகாத்து வருகிறார்கள். அதற்கான கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பூர்த்தி செய்வதற்குப் பண உதவி போதாது ஸ்தம்பிதமாகி உள்ளதை விளக்கமாகக் கூறி எப்படி நிதி சேர்க்கலாம் என்பதனை விளங்கப்படுத்தினார்கள்.
கலை நிகழ்ச்சிகள், கண்கவர் துள்ளிசைப்பாடல்கள், காதுக்கினிய கீதங்கள் மாஜாயாலம் எனப் பல நிகழ்ச்சிகள் வந்தோரை மகிழ்வித்தது.
நிகழ்ச்சியை முதலாவது தமிழ் வானொலியின் உரிமையாளர் நாடா மோகன் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் மிகவும் ஆர்வமாகத் தொய்வில்லாமல் நிகழ்ச்சியை நடாத்தினார்.
இரங்கும் இல்லம் ஸ்தாபகர் ஸ்ரீபதி சிவனடியான் அவர்கள் நிகழ்ச்சியைக் காணொளிக் காட்சிகளாக்கி தரை ஏற்றம் செய்துள்ளார். இவற்றை ADVRO என You Tube இல் SEARCH பண்ணுவதன் மூலம் 10 க்கும் மேலான காட்சிகளைப் பார்வையிட முடியும்
இறுதியில் அறுசுவை இராப்போசனத்தைச் சுவைத்து ஆதரவாளர்கள் வீடு திரும்பினார்கள். இவ்வமைப்பின் பணிகளுக்கு உதவுபவர்கள் www.advro.org.uk இல் பார்வை இட்டு உதவலாம். நன்றி.



















