வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழா நிகழ்வும் வாசிப்பு மாத நிகழ்வும் நேற்றையதினம் (18) இடம்பெற்றது.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசசபையில் புதிதாக அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் மற்றும் நூலகம் என்பன நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. மாநாட்டு மண்டபத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் நூலகத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
முன்னதாக விருந்தினர்கள் நெடுங்கேணி மகாவித்தியாலய முன்றலில் இருந்து பிரதான வீதி வழியாக பான்ட் வாத்திய அணி வகுப்புடன் அழைத்து வரப்பட்டு திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வாசிப்பு மாத நிகழ்வுகளும் வவுனியா வடக்கு பிரதேசசபைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நெடுங்கேணி பிரதேசசபைக்குட்பட்ட பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளும் திறந்து கொடுக்கப்பட்டதுடன் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வவுனியா தெற்கு பிரதேசசபைத் தலைவர் சிவலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் சந்திரகுலசிங்கம், வவுனியா தெற்கு கோட்டகல்வி அதிகாரி எம்.பிநடராஜா உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
























