கட்டட நிர்மாணம், வாகனக் கொள்வனவு என்பவற்றுக்கு வடமாகாண சபை மேலதிக நிதியினை ஒதுக்கித் தருமாறு தேசிய நிதி ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வடமாகாணசபையின் வேலைத்திட்டங்களுக்கு 17 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாகவே இந்த நிதியை ஒதுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விட்டுள்ளார்.
மாகாணசபைக்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்யும் தேசிய நிதி ஆணைக்குழு அனுமதிக்காக திறைசேரியிடம் இதனை தெரியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். திறைசேரியின் அனுமதி கிடைத்ததும் முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தேசிய நிதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
















