இங்கை ஜனாதிபதிக்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இவ்வாறு தெரிவிக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி .
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது.அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் என்பதை எவருமே மறுக்க முடியாது.
உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டு தெரிவித்துள்ளதுடன்,இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதது மிகுந்த கவலைக்குரிய விடையம்.
ராஜபட்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல இரண்டுங்கெட்டான் நிலையில், தான் (மன்மோகன் சிங்) செல்லவில்லை என்றும், சல்மான்குர்ஷித் தலைமையிலான குழு செல்லும் என்றும் பிரதமர் முடிவு எடுத்தார்.
ஆனால் டேவிட் கேமரூன், ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இலங்கை ராணுவம் செய்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்றும் கேமரூன் வலியுறுத்தியமை உலகத்தமிழர்கள் மனதில் மதிப்புக்குரிய மனிதனாக இடம்பிடித்து விட்டார்.இந்தப் பணியை மத்திய அரசு செய்திருந்தால், தமிழ்ச் சமுதாயம் நன்றி செலுத்தியிருக்கும்.குர்ஷித் செய்தது என்ன… தமிழர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்ற சல்மான் குர்ஷித் செய்தது என்ன தமிழர்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக மாநாட்டில் கர்ஜிக்கவும் இல்லை…
இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















