தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட நகரங்களில் வழமைக்கு மாறாக இராணுவத்தினர் அதிகளவில் காணப்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சந்திக்குச் சந்தி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்திற்குள் தீபம் ஏற்றுவதை தடுப்பதற்காகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றம் மாலைவேளையில் ஆலயங்களில் மணி எழுப்புதல், பொது இடங்களில் தீபங்களை ஏற்றுதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வட கிழக்குப் பகுதியில் வழமைக்கு மாறான சூழ்நிலை நிலவுகின்றது.
















