வெளிநாட்டு தூதருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது; நீதிமன்றம் அறிவிப்பு

Prasadஇந்தியாவிற்கான இலங்கை ததுவர் பிரசாத் காரியவசம், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை, மதுரை மேல் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.

அதன்படி இலங்கை தூதர், பிரசாத் கரியவசம், கடந்த மார்ச் 19ஆம் திகதி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அதில், இலங்கையில் உள்ள, 12 சதவீத தமிழர்கள் மீது மட்டுமே இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. அங்குள்ள, 75 சதவீதமானவர்கள் சிங்களர்கள், அவர்கள் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

எனவே, தமிழர்கள் மீது மட்டுமின்றி, சிங்களவர்களையும் ஆதரிக்க வேண்டும் எனவும்
இது இந்தியர்களை வட மாநிலத்தவர், தென் மாநிலத்தவர் என பிரிக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் வியன்னா மாநாட்டு தீர்மானப்படி, ஒரு நாட்டு தூதர், மற்றொரு நாட்டில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, கருத்துக்களை வெளியிடக்கூடாது அந்நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்.

எனினும் பிரசாத் காரியவசம் அதனை மீறியுள்ளதாளவும் திருநெல்வேலியை சேர்ந்த லேனாகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

எனவே அவர், நம்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதிக்கும் வகையில், கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும். என்றும் வெளிநாட்டு தூதர்களுக்கான நன்னடத்தை விதிகளை அல்படுத்தும்படி வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

அதன்படி மனுவை விசாரித்த நீதிபதிகள் இது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பானது. வெளிநாட்டு தூதருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

எனினும் இதனை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இம்மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல எனவே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags: , ,

Leave a Reply