இலங்கையின் சனத்தொகையில் 30 இலட்சம் தமிழர்கள்

refugee3அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 6372 பேர் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் ஒரு கோடி 51 லட்சத்து 73820 பேர் சிங்களவர்களாவர். 18 லட்சத்து 69820 பேர் முஸ்லிம்கள். 33,061 பேர் பறங்கியர்கள். 40189 பேர் மலே இனத்தவர்களாவர்.

2011 – 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சனத்தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளது.

இந்த சனத்தொகை மதிப்பீட்டின்படி இலங்கையில் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 42 லட்சத்து 21 ஆயிரத்து 844 என்று தெரியவந்துள்ளது.

இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54ஆயிரத்து 606 ஆகும். முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 227 என்றும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 9 ஆயிரத்து 606 என்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply