கமலேந்திரன் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

kanthasamy-kamalநெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியனின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியனின் ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம் குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது.

ஆனாலும், இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மற்றும் படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த காலங்களில் பேரவலங்களையேசந்தித்து வந்திருக்கின்றார்கள்.

ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்.

எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து மீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply