பிரிட்டனை சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர், தனது அபிமான கால்பந்தாட்டக் கழகத்தின் சின்னத்தை தனது கண்ணாடிக் கண்ணில் பதித்துக் கொண்டுள்ளார்.
35 வயதான அண்ட்ரூ கனோவன் என்பவரின் இடது கண்ணில் பார்வை பறிபோனதால் 20 வருடங்களுக்கு முன் அவரின் கண் அகற்றப்பட்டு கண்ணாடிக் கண்ணொன்று கற்குழியில் பொருத்தப்பட்டது.
நியூகாசல் கால்பந்தாட்டக் கழகத்தின் தீவிர ரகசிகரான அன்ட்ரூ, தனது கண்ணாடிக் கண்ணில் அக்கழகத்தின் இலச்சினையை பதித்துக்கொள்ள தீர்மானித்தார்.
தமது அபிமான கழகத்தின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதற்கு அவர் தீர்மானித்தார்.
எனினும் பதிவுசெய்யப்பட்ட இலச்சினையை கண்ணில் பொருத்துவதால் ஏதேனும் சட்டச்சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அக்கழகத்தினரிடம் முன் அனுமதி பெறுதவற்காக சுமார் ஒரு வருடகாலம் முயற்சிகளை மேற்கொண்டாராம். அனுமதி கிடைத்தபின் அந்த இலச்சினையை அவர் கண்ணில் பதித்துக்;கொண்டுள்ளார்.
















