பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியாவில் ஊர்வலம் – படங்கள் இணைப்பு

vav-womanபெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இன்று (6) ஊர்வலமொன்று இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகளானவை மக்களின் வாழ்க்கையையும், சமூக அபிவிருத்தியையும் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றமையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ளோரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஊர்வலத்தினை வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆரம்பித்த இவ் ஊர்வலம் கடை வீதியூடாக சென்று பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றியிருந்ததுடன் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுர விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

நகர வழியாக வந்த இந்த ஊர்வலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான தெருநாடகமும் இடம்பெற்றது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றினையும் கையளித்தனர்.
vav-woman2

vav-woman3

Tags: , ,

Leave a Reply