பாலஸ்தீனத்தின் சுதந்திர ஒருமைப்பாட்டை சீர்குலைத்து பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை துண்டித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏகாதிபத்தியம் நடத்துகின்ற தாக்குதல்களுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிர்மாணிப்பதற்கான போராட்டம் என தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து வேட்டை இன்று (6) வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சோசலிஸ இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளருமாக பிமல் ரட்நாயக்கா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன் போது பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை இக் கையெழுத்து வேட்டையானது 50 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு பலஸ்த்தீன தூதுவரிடம் மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

















