பூந்தோட்டம் மகாவித்தியாலய அதிபரின் செயற்பாட்டால் நடுவீதியில் நடந்த பழைய மாணவர்சங்க பொதுக் கூட்டம் – படங்கள் இணைப்பு

poonthottam1பூந்தோட்டம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்ககூட்டம் இன்று (08) காலை 11.00 மணியளவில் உபதலைவர் சோமகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்திற்கு பூந்தோட்டம் பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் பாடசாலை கட்டிடத்தை கொடுக்க மறுத்த சம்பவம் பழைய மாணவர்களுக்கு பெரும் மனவிரக்தியையும் சிரமத்தையும் கொடுத்துள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பாடசாலையின் முன் வீதியிலே கொட்டகையமைத்து மேற்படி கூட்டம் நடைபெற்றது. உபதலைவர் சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் பகிரதன் சென்ற கூட்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கணக்கறிக்கை சமர்பித்தார். இக்கூட்டத்தில் நூறுக்கம் அதிகமான பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாடசாலை அதிபரினால் பாடசாலை கட்டடம் கூட்டத்திற்காக வழங்கப்படாத நிலையில் இப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், மாணவிகள் பலர் நீண்ட நேரம் பாடசாலை வாயிலின் முன்பாக வீதியில் காவல் நின்றதையும் அதன் பின்னர் வீதியில் கொட்டகை அமைத்து கூட்டமை; நடைபெற்றதையும் காணக் கூடியதாகவிருந்தது.

இன்றை கூட்டம் தொடர்பாக பழைய மாணவனர் சங்க உபதலைவர் சோமகாந்தன் கருத்து தெரிவிக்கையில், பழைய மாணவர் சங்க கூட்டத்தை நாம் பாடசாலை அதிரிடம் அனுமதி கோரிய போது அவரே இன்யை தினத்தை தீர்மானித்து தந்திருந்தார். இதனால் எமது பழைய மாணவர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தோம். இந் நிலையில் அதிபர் கூட்டத்தை நடத்தாமல் செய்யும் முகமாக மாறுபட்ட கருத்துக்களை கூறினார். இதனால் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடமும் சென்ற இது தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே அவர்களின் அனுமதியடனே இன்று கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாடசாலைக்கு செல்ல முடியாதவாறு பாடசாலை வாயில்கள் மூடப்பட்டிருந்தன. அதிபரும் உள்ளே சென்று கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரவில்லை. இதனால் காத்திருந்து விட்டு வீதியில் கொட்டகை அமைத்து கூட்டம் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

பாடசாலை கட்டிடம் வழங்காததிற்கு ஏதாவது பொருத்தமான காரணங்கள் இருக்கின்றனவா என கேட்டதிற்கு, இவ்வாறு பழையமாணவர்கள் பதிலளித்தனர் பாடசாலை மட்டத்திலும் அதிபராலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன அதற்கான விளக்கம் கேட்கவே தீர்மானித்திருந்தோம். ஆனால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போகும் எனப் பயந்தே எமது கூட்டத்தை குழப்ப முனன்றதாக சுட்டிக்காட்டினார்கள்.
poonthottam

poonthottam2

poonthottam3

Tags: , ,

Leave a Reply