வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தரவித்தியாலயத்தில் உயர்ந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு பரிசுகள்! வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்

vav-sch2வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான தேசமான்ய சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

வெளிக்குளம் கனிஸ்ட உயர்தரப் பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது,

இப் பாடசாலையானது எனது ஊhர் பாடசாலையாகும். இதனால் இப் பாடசாலையை வளர்க்க வேண்டிய தேவையும் பங்கும் எனக்கும் உள்ளது. இப் பாடசாலையின் வளர்ச்சிக்காக 2014 ஆம் ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு தொகை பணமும் வழங்கப்படும். அத்துடன் இப் பாடசாலை மாணவர்களுக்கு பல உதவிகளை எமது அமைப்பு எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக இவப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் உயர் பெறுபேறுகளை பெறும் மாணவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில், பாடசாலை அதிபர் பே.கணேஸ், உப அதிபர் திருமதி மகேஸ்வரன், வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியச் செயலாளர் கு.சஜிக்குமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
vav-sch1

vav-sch3

vav-sch4

Tags: , ,

Leave a Reply