டுவிட்டரில் சமந்தா பற்றி பரவிய செய்தி உண்மையில்லையா?

samantha2நடிகர் – நடிகைகள் ரசிகர்களுடன், ஒரு தொடர்பு வேண்டுமே என்பதற்காகத்தான் டுவிட்டர், பேஸ் புக்கில் கணக்குத் துவங்கி, தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அப்படித்தான் சமந்தாவும், அவ்வப்போது, செய்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில், இரவு, பகலாக படப்பிடிப்பில், கலந்து கொண்டதால், என் உடல் இளைத்து விட்டது.

அதனால், சில வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல், ஓய்வெடுக்கப் போகிறேன் என்று, டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால், மீண்டும் சமந்தாவுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், தமிழில் கமிட்டான படங்களில் இருந்து, அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தவறான வதந்தி பரவிவிட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள சமந்தா, இனி டுவிட்டரில், சொந்த விஷயங்களை வெளியிடுவதை தவிர்க்க உள்ளாராம்.

மேலும், தன் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த சமந்தா, இப்போதைக்கு, நான் சினிமாவில் பிசியாக இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டு கழித்தே, திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply