நூறு ஏக்கர் சோளக் காட்டில் விஜய், மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்
ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டை பேசி வாங்கினார் R.B.சௌத்ரி .அதில் கொஞ்சம் பகுதியில் சமன் செய்து அதில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப் பட்டது.
அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப் பட்டது 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர்.
அதற்காக அமைக்கப்பட்ட அரங்குக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை ஆறு நவீன காமிரா யுக்தியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.
அந்த நூறு ஏக்கர் சோளக் காட்டையும் ஹெலிகேம் என்கிற நவீன காமிரா மூலம் படமாக்கி இருப்பது திரையில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும்.
















