கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுகிறது.
நெல்சன் மண்டேலாவின் உடல் தென்னாபிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
கடந்த 5ஆம் திகதி மண்டேலா தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.
அவருடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக கடந்த 11ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் 91 நாடுகளைச் சேர்ந்த இராஜ தந்திரிகள் கலந்து கொண்டமை சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.
கறுப்பு இன மக்கள் விடுதலையைப் பெற தன்னையே அர்ப்பணித்த பிதா என போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையொன்று நாளை தென்னாபிரிக்கா யூனியன் கட்டட சதுக்கத்தில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















