40 வருடங்களுக்கு மேலாக மகனை கூண்டில் அடைத்துள்ள பாசமிக்க தாய்

Mother-China-சீனாவைச் சேர்ந்த தாயொருவர் தனது மகனை 40 வருடங்களுக்கு மேலாக கூண்டினுள் அடைத்து வைத்துள்ளார்.

சீனாவின் ஷெங்ஷொயு நகரில் உள்ள பெங் வெய்கிங் என்ற 48 வயதான நபரே 40 வருடங்களுக்கு மேலாக தாயினால் கூண்டில் அடைந்து வைக்கப்பட்டுள்ளார்.

வெய்கிங்குக்கு சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சலினையத்து மூளை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் தன்னை காயப்படுத்திக்கொள்ளும் ஒரு வகை கோளாறினால் 6 வயதிலிருந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் வெய்கி.

தொடர்ந்து தனது மகன் தன்னைத் தானே காயப்படுத்திககொள்வதனை தடுக்க வெய்கிங்கின் தந்தை அமைத்த கம்பிக் கூட்டில் சிறுவயது முதல் அடைத்து பாதுகாத்து வருவதாக வெய்கிங்கின் தாய் வய்மெய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 80 வயதான தாய் வய்மெய் கூறுகையில், தன்னைத் தானே கட்டுப்படுத்தும் திறன் எனது மகனிடம் இல்லை. நடக்கும் போது திடீரென கீழே விழுந்துவிடுவான். அம்மா என்பதற்கு கூட அவனுக்கு அர்த்தம் தெரியாது. அவன் எனது 48 வயது குழந்தை என கவலை தெரிவித்துள்ளார்.

வய்மெயின் கணவரும் தற்போது உயிருடன் இல்லை. இதனால் தனது மரணத்ததின் பின்னர் வெய்கிங்கை பார்த்துக்கொள்ளும் ஒருவரை தேடுவதற்கும் வய்மெய் எதிர்பார்த்துள்ளார்.

Tags: ,

Leave a Reply