மண்டேலாவுக்கு மஹிந்த செலுத்திய அஞ்சலி போலி; மாவை சேனாதிராசா தெரிவிப்புf

mavaiசிறுபான்மையினரான தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் – போர்க்குற்றம் சுமத்தப்பட்ட – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ குழுவினர், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு செலுத்தியது போலித்தனமான அஞ்சலியே.

சர்வதேச நாடுகளை ஏமாற்றும் செயலே இது. மண்டேலாவுக்கு நாம் செலுத்தும் ஆத்மார்த்த ரீதியான அஞ்சலிக்கும் ஜனாதிபதியின் போலியான அஞ்சலிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசு மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயக விழுமியங்கள் அற்ற நாடாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கை அரசின் மீது போர்க்குற்றச் சாடல்களும் சுமத்தப்பட்டன.

இங்கு சிறுபான்மையினரான தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டு, ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராட்டிய மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதியும் அவரது குழுவினரும் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.

ஆயினும் அவர்களது அஞ்சலி போலியானதே. 6 தசாப்தங்களாக நடந்த போரில் இலட்சக் கணக்கில் மக்களைப் பறி கொடுத்த நிலையில் எமது இனத்தை அழித்து விட வேண்டும் என்று செயற்படும் இத்தகையவர்கள் அங்கு செலுத்துவது போலியான அஞ்சலியே – என்றார்.

மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சிவஞானம், பா.கஜதீபன், இ.ஆனல்ட், ச.சுகிர்தன் மற்றும் கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நெல்சன் மண்டேலாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் அனுப்பப்பட்டிருந்த அஞ்சலிச் செய்தியும் இங்கு வாசிக்கப்பட்டது.

Tags: , ,

Leave a Reply