கமலுக்கு மைக் கிடைத்தால் போதும். சகட்டுமேனிக்கு எதையாவது பேசிவிடுவார் அல்லது உளறிவிடுவார்.
சாதாரணமாக அவர் பேசுவதே மிமிக்ரி கலைஞர்கள் கிண்டல் பண்ணுமளவுக்கு, படு செயற்கையாக இருக்கும். பேசும் விஷயமோ அதைவிட செயற்கையாய்…!
மேடை நாகரிகத்துக்காக மிகைப்படுத்தி பேசுவது, கொஞ்சும் ஐஸ் வைப்பது இதெல்லாம் சகஜம்தான்.
கமலின் பேச்சு இதை எல்லாம் மிஞ்சியது. தன் பேச்சைக் கேட்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அநியாயத்துக்கு அளப்பார்.
சென்னையில் நடக்கும் ஃபிலிம்ஃபெஸ்டிவல் துவக்கநாள் விழாவிலும் இப்படித்தான் ஏடாகூடமாகப் பேசி ரஜினி ரசிகர்களிடம் ஏழரையை இழுத்திருக்கிறார் கமல்.
”ரஜினி உடன் மறுபடி சேர்ந்து நடிப்பீர்களா?”
– என்று அவர்களாகவே இட்டுக்கட்டிய கேள்விக்கு கமல் பதில் சொல்வதாக ஏற்பாடு..! (பழைய ஏற்பாட்டைவிட பழைய கேள்வி இது)
இந்த இத்துப்போன கேள்விக்கு கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?
”ரஜினியும் நானும் நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கும். எங்களுக்கு சம்பளம் கொடுத்து படம் எடுக்குமளவுக்கு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.” என்றதோடு நிறுத்திக்கொண்டிருந்தால் கமலுக்குப் பிரச்சனை வந்திருக்காது.
”நான் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ரஜினி சம்பளம் வாங்காமல் நடிப்பாரா என்று தெரியவில்லை. அவரிடம்தான் கேட்க வேண்டும்”
என்று தேவையே இல்லாமல் ரஜினியை வம்புக்கு இழுத்தார் கமல்.
இவர் சம்பளமே வாங்காமல், இலவசமாக நடிக்கத் தயாராக இருப்பவர் போலவும், ரஜினி சம்பளம் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொள்ளவே மாட்டார், காசு விஷயத்தில் கறாரான ஆள் என்பதுபோலவும் ஒரு தொனி கமலின் பேச்சில் இருந்தது.
கமலின் பேச்சைக் கேட்டவர்களுக்கே இப்படி தோன்றியபோது, ரஜினி ரசிகர்களுக்கு எப்படி தோன்றும்?
”எங்க தலைவர் எத்தனை பேருக்கு சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் கமலுக்குத் தெரியுமா?”
”கமல் எத்தனை படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார் என்பதை பகிரங்கமாக சொல்லத் தயாரா?”
”என்னவோ இவர் சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்து கலைச்சேவை செய்வதுபோல் பேசி இருக்கிறாரே.. இவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்தார்கள் என்ற பட்டியலைத் தரவா?”
என்றெல்லாம் கொதிக்கிறார்கள் ரஜினியின் உண்மை ரசிகர்கள்..!
கமலும் தன் வாயால் கெடும்!
















