சினிமா நட்சத்திரங்களின் சகல ரகசியங்களையும் அறிந்தவர் யார் என்றால் அவர்களின் மானேஜர்கள்தான்.
குறிப்பாக, நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்?
அதில் கணக்கில் காட்டப்படும் தொகை எவ்வளவு?
கணக்கில் வராத கருப்புப் பணம் எவ்வளவு?
அந்த கருப்புப் பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் எவ்வளவு?
என அத்தனை விவரங்களும் மானேஜர்களுக்குத்தான் அத்துப்படி!
இவர்களுக்கு சம்பளம் என்பது நட்சத்திரம் வாங்கும் சம்பளத்தில் கிடைக்கும் கமிஷன்தான். மூன்று முதல் பத்து சதவிகிதம் வரை மானேஜர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
மானேஜர்கள் வைத்துக்கொள்ளாத நடிகர் நடிகைகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏறக்குறைய அனைவருமே மானேஜர் வைத்திருக்கும்போது..
சிவாஜி குடும்பத்து நடிகர்களுக்கு மட்டும் மானேஜர்களே கிடையாது.
சிவாஜிக்கு அவரது தம்பி சண்முகம்தான் மானேஜர்.
பிரபு நடிகரானதிலிருந்து இன்றுவரை அவருக்கு, அவரது அண்ணன் ராம்குமார்தான் மானேஜர்.
இதோ இப்போது நடிகராகிவிட்ட பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் கால்ஷீட் விவகாரங்களை ராம்குமாரின் மகன் துஷ்யந்த் கவனிக்கிறார்.
விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்ல வேண்டும் என்றால் இவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். கதை கேட்பது, சம்பளம் பேசுவது எல்லாமே துஷ்யந்திடம்தான்.
வெளி ஆட்களை மானேஜராக வைக்காமல் சிவாஜி குடும்பத்தினரே மானேஜர் வேலை பார்ப்பது ஏன்?
மானேஜர் வைத்தால் அவர்களுக்கு கமிஷன் என்ற பெயரில் பல லட்சத்தை கொடுக்க வேண்டும். அதோடு, கருப்புப் பண ரகசியமும் அவர்களுக்குத் தெரிந்து, அவர்களின் மூலம் வெளியே தெரிந்துவிடும்.
இந்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்றுதான் மானேஜர் வேலையை அண்ணன் தம்பிகளே பார்த்துக் கொள்கிறார்களாம்..!
என்னமா யோசிக்கிறாங்கப்பா!?
















