சில உண்மைகள் ஆச்சரியமாக இருக்கும், சில உண்மைகள் அதிர்ச்சிகரமாக இருக்கும். இந்த செய்தியை நீங்கள் எதில் சேர்த்துக் கொண்டாலும் சரிதான்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் ஒரு தெருவையே வளைத்துப் போட்டு மகன் சண்முகப்பாண்டியனை ‘சகாப்தம்’ படத்தின் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜயகாந்த்.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல அவரது பழைய சகாக்களான பிரபு, சத்யராஜ் போன்றவர்கள் மெனக்கிட்டு அந்த விழாவுக்கு வந்து சண்முகப்பாண்டியனை வாழ்த்தி விட்டுப் போனார்கள்.
ஆனால் பல பிரபலங்களோ எதற்கு வேண்டாத வம்பு என்று வாழ்த்துக் கடிதங்கள், வாழ்த்து எஸ்.எம்.எஸ், போனில் ரகசியப் பேச்சு ஆகிய தொலைவுத் தொடர்புகளோடு நிறுத்திக் கொண்டார்கள்.
விழாவில் தன் மகன் சண்முகப் பாண்டியனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிய விஜயகாந்த் ” நான் அறிமுகமானபோது கூட இரண்டு ஹீரோயின்களுடன் அறிமுகமாகவில்லை. ஆனால் என் மகன் சண்முகப்பாண்டியனுக்கு இந்தப் படத்தில் இரண்டு ஜோடி இருக்கிறார்கள். அந்த இரண்டு பேருடனும் சண்முகப்பாண்டியன் டூயட் பாடுவார் என்றார் கொஞ்சம் பொறாமையோடு…
அப்படியானால் ஹீரோயின்கள் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? அந்த ஏரியாவை விசாரித்தால் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர் ஸ்ரீதேவியின் மகள் என்றார்கள்.
என்ன நடிகர் விஜயகுமாரின் இளையமகள் ஸ்ரீதேவிக்கு அதற்குள் வாலிப வயசில் ஒரு பெண் இருக்கிறாளா..? என்று நாம் ஆச்சரியப்பட.., அட நீங்க வேற மாஜி நடிகை ஸ்ரீதேவி இருக்காங்கள்ல.., அதாங்க 16 வயதினிலே பிகரு… அவங்களோட பொண்ணு ஜான்வி தான் ஒரு ஹீரோயினா இந்தப் படத்துல நடிக்கப் போறாங்க.., என்று அதிர்ச்சி கொடுத்தார்கள்.
ஆமாம் பாஸு… அதற்கான பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டிருக்கு, அதுக்காகவே மும்பைக்கு போய் ஸ்ரீதேவியை நேர்ல மீட் பண்ணி கன்வீன்ஸ் பண்றதுக்கு ஒரு டீம் தீயா வேலை செஞ்சுக்கிட்டிருக்கு என்கிறார்கள்.
இந்த செய்தியையெல்லாம் நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் கமலை கோவணத்துடனே பார்த்து விட்ட ஸ்ரீதேவியின் மகள் சண்முகப்பண்டியனை பேண்ட் சர்ட்டுடன் பார்க்க மாட்டாரா என்ன..?
அப்படி நடந்து விட்டால் என்ன கொடுமை சரவணன் இது? என்ற வசனத்தைப் பேசு மனசை தேத்திக் கொள்ள வேண்டியது தான்.
















