சென்னையில், 11 ஆவது சென்னை சர்வதேச திரைப்படவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தத் திரைப்படவிழாவில் சுஹாசினி, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ரோகிணி போன்ற ‘ஆன்ட்டி’ நடிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குறிப்பாக, சுஹாசினியின் பங்களிப்பு அதிகம்…!
சென்னை சர்வதேச திரைப்படவிழாவை பிரபலப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ ஷாப்பிங் மால், பெசன்ட்நகர் பீச் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவது முதல், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி கமல் முதல் அமீர்கான் வரை அனைவரையும் அழைத்து வருவதுவரை சுஹாசினிதான்.
இந்தத் திரைப்படவிழாவில் அவர் முக்கியப்புள்ளியாக இருப்பதினாலோ என்னவோ அவர் காலத்து கதாநாயகிகள் எல்லாம் விழாக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் பல நடிகைகள் சாயந்தரமானால் பாட்டிலும் கையுமாக உட்கார்ந்து சரக்கு அடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது பின்குறிப்பு செய்தி.
இப்படிப்பட்ட ‘நல்ல பழக்கம்’ உள்ள நடிகைகள் விழாக்குழுவில் நிரம்பி இருப்பதாலோ என்னவோ… சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ஸ்க்ரீனிங் முடிந்ததும், ராத்திரியானால் நட்சத்திர ஹோட்டலில் கூடுகிறார்கள். விடியவிடிய குடிக்கிறார்கள்.
ராத்திரி கதை இப்படி என்றால்…
பகலில் திரையிடப்படும் பல படங்கள் படுக்கையறைக்காட்சிகள் நிறைந்த பலான படங்களாக இருப்பதாக சொல்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.
பப்பி லவ், யங் அண்ட் பியூட்டிஃபுல் உட்பட திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட பல படங்கள் ‘ச்சீய்’ ரகமான படங்கள்தான்.
எத்தனையோ உலகத்தரமிக்க அற்புதமான படங்கள் இருக்க, வேண்டுமென்றே இப்படிப்பட்ட ‘ச்சீய்’ படங்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து திரையிடுகிறார்கள்.
அப்போதுதானே தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகி..காசு..பணம்..துட்டு..மணி…மணி..எல்லாம் கொட்டும்.?
கடந்த வருடம் சரத்குமாரின் முயற்சியில் சென்னை சர்வதேச திரைப்படவிழாவுக்கு தமிழக அரசு பல லட்சம் பண உதவி செய்தது.
நல்லவேளை! இந்த வருடம் தமிழக அரசு நயாபைசா கொடுக்கவில்லை.
கலாசாரத்தை காலி பண்ணுகிற இதுபோன்ற திரைப்பட விழாவுக்கு இந்த வருடத்தைப் போலவே இனி வரும் வருடங்களிலும் தமிழக அரசு நயாபைசா கொடுக்கக் கூடாது என்பதே நல்ல சினிமாவை விரும்புகிறவர்களின் கோரிக்கை.
















