தனக்கு விருப்பமான ´சான்ட்விச்´ கிடைக்கும் வரை விமானத்தை இயக்க விமானி மறுத்ததால் பாகிஸ்தான் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து கடந்த, 14ம் திகதி காலை 6:45 மணிக்கு நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
ஆனால் அந்த விமானத்தின் உணவு பட்டியலில் விமானி நவுஷாத்துக்கு விருப்பமான “சான்ட்விச்´ இடம் பெறவில்லை.
“சான்ட்விச் வந்தால் தான் விமானத்தை இயக்குவேன்´ என விமானி அடம்பிடித்தார். கராச்சியில் உள்ள விமானத் துறை தலைமை அலுவலகத்திற்கு விமானியின் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
விமானியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டரிங் துறைக்கு, விமானத் துறை தலைமையகம் உத்தரவிட்டது.
விமானி கேட்ட சான்ட்விச், நகரில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் அமைந்துள்ள, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து, வரவழைக்கப்பட்டது.
சான்ட்விச் வந்து சேர்ந்த பின் வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது.
















