குடும்பமாக இருக்க ஆசைப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் விடுமுறை காலத்தில் குடும்பமொன்றினை வாடகைக்கு பெற விரும்புவதாக வித்தியாசமான விளம்பரமொன்றினை வெளியிட்டுள்ளார்.
சிறிய வயதில் குடும்பத்திலிருந்து பிரிந்து அவதிப்படும் வில்லியம் ஜெஸப் என்ற 26 வயதான பல்கலை மாணவியொருவரே இந்த விளம்பரத்தினை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து வில்லியம் கூறுகையில், நான் பிரிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். சில வருடங்கள் துஷ்பிரயோகத்தினால் சிறுவயதில் வருந்தினேன். வீதிகளில் வாழ்ந்தேன் எனத் எனத் தெரிவித்துள்ளார்.
இவர் தனது விளம்பரத்தில், ‘விடுமுறை காலத்தில் சில நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 8 அமெரிக்க டொலருக்கு குடும்பமொன்றினை வாடகைக்கு எடுக்க தேடுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
வில்லியமின் விளம்பரத்துக்கு அவரது குடும்பப் பின்னணியை ஒத்த சில குடும்பங்கள் பதிலளித்துள்ளன. இதனால் சிறிய குடும்பமாக ஒன்றுகூடலாம் என அவர் எதிர்பார்த்துள்ளார்.
இதேவேளை பெரிய திருட்டுச் சம்பவத்துடன் வில்லியம் கைதாகி சில வருடங்கள் சிறையில் இருந்துள்ளார் எனவும் தகல்கள் கூறுகின்றன.
















