ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு! பாரதிராஜாவுக்கு ஏது இவ்வளவு பணம்? – மலேஷியாவில் பண வசூல் நடத்தினாரா?

Bharathiraja16 வயதினிலே, முதல்மரியாதை போன்ற ஒன்றிரண்டு சிறந்த படங்களை இயக்கிவிட்டு தமிழ்சினிமாவுக்கே தான்தான் பிதாமகன் என்ற மமதையில் திரியும் பாரதிராஜாவுக்கு இன்னொரு முகம் உண்டு.

பணவிஷயத்தில் அவரைப்போல் ஒரு கருமியை உலகத்திலேயே பார்க்க முடியாது.

மற்றவர்களுக்கு உதவுகிற விஷயத்தில் மட்டுமல்ல, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அநியாயத்துக்கு யோசிப்பவர் என்ற ‘நற்பெயர்’ பெற்றவர்.

பாரதிராஜா என்ற பிம்பத்தை நம்பி அவரிடம் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்துவிட்டு, பிறகு தலைதெறிக்க ஓடி வந்தவர்கள் – பல பேர்.

வறுமையை தாக்குப்பிடிக்க முடியாமல், தப்பித்தவறி வாய்விட்டு சம்பளத்தைக் கேட்டுவிட்டால் அந்த உதவி இயக்குநரை அடிக்காத குறையாய் கடித்து குதறுவாராம் பாரதிராஜா.

அதுமட்டுமல்ல, தமிழ்சினிமாவில் தான் பெரிய கொம்பன் என்று சொல்லிச்சொல்லியே நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்பக்கலைஞர்களையும் அடிமாட்டு சம்பளத்துக்கு தன் படத்திற்கு கமிட் பண்ணுவார்.

அந்த அடிமாட்டு சம்பளத்தையும் பேசியபடி கொடுக்க மாட்டார் – என்று இவரால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் ஏராளமான கதைகள் உண்டு.

அன்னக்கொடி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டதாம்.

இப்படிப்பட்ட தர்மபிரபு…மகாராசன்….வள்ளல்…பாரதிராஜா ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்கிறார் என்று கேள்விப்பட்டபோது அதிர்ச்சியில் தலைசுற்றிவிட்டது – நமக்கு.

அவற்றில் ஒரு படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறாராம். (அவரே பார்த்துக்க வேண்டியதுதான்)

மற்றொரு படத்தை அவரது கலையுலக வாரிசு மனோஜ் கதாநாயகனாக நடித்து, அவரே இயக்குகிறாரம். (செத்தான்டா..ரசிகன்)

இன்னொரு படத்தை அகத்தியன் இயக்க, ரகுநந்தன் இசையமைக்கிறார். இப்படத்தின் கம்போஸிங் அண்மையில்தான் முடிந்து இருக்கிறது.

நான்காவது படத்தை பாரதிராஜாவின் மச்சான் விஜயமனோஜ்குமார் இயக்க இருப்பதாகவும் அல்லது சம்பளம் கேட்காத இயக்குநர் யாராவது இயக்க இருப்பதாகவும் தகவல்.

சரி..4 படம் எடுக்குமளவுக்கு பாரதிராஜாவுக்கு ஏது பணம்?

கலைஞர் டி.வி.யில் சீரியல் எடுத்தார் அல்லவா? அப்போது வழக்கம்போல் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சேர்த்த பணம் – என்கிறது பாரதிராஜாவைப் பிடிக்காத ஒரு கூட்டம்.

மற்றொரு சோர்ஸ் சொல்லும் தகவல்தான் நம்புகிற மாதிரி இருக்கிறது.

பாரதிராஜாவின் மகள் ஜனனி திருமணமாகி மலேஷியாவில் இருக்கிறார். அவரைப் பார்க்க அடிக்கடி மலேஷியா செல்லும் பாரதிராஜா அங்குள்ள பளபளா சட்டைப்போட்டிருக்கும் ‘டத்தோ’க்கள் சிலரை அமுக்கிவிட்டாராம்.

அவர்களுக்கு பெரிய அளவில் ஃபிலிம் காட்டி சில கோடிகளை வசூல் செய்துவிட்டாராம்.

அந்தப் பணத்தில்தான் ஒரு நேரத்தில் 4 படங்களைத் தயாரித்து தன் குடும்பக் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் பாரதிராஜா.

Tags: ,

Leave a Reply