50 ஏக்கர் காணியே தனி நபர் வைத்திருக்கலாம் : அமுலாகிறது புதிய சட்டம்

courtகாணி உரிமை தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்டதைப் போல சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன் படி தனி நபர் ஒருவர் வைத்திருக்கக் கூடிய அதி கூடிய காணியின் அளவு 50 ஏக்கர் எனவும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இச்சட்டம் காரணமாக சட்டவிரோதமான முறையில் காணி உரிமையை பேணி வருவதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதை குறைக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply