காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் செயலகம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – சுரேஸ் பிரேமசந்திரன்

Suresh-Premachandran3காவல்துறை, நீதிமன்றக் கட்டமைப்பு, தேர்தல் திணைக்களம் ஆகியன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் நல்லாட்சி பற்றி பேசுவது உசிதமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் திணைக்களம் ஆகியன சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் 30 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், முதலமைச்சரின் செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம் கூட கூட்டமைப்பிற்கு கிடைக்காத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் நல்லாட்சி நிலவுவதாகவோ, ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவோ கருத முடியாது என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: , , , , , ,

Leave a Reply