உங்களுடைய கீழாடை உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் அது ஒரு எச்சரிக்கை மணியாகும்!

marilyn-monroeகடந்த பல ஆண்டுகளாக இடுப்பில் சதை பெருத்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. உங்களுடைய கீழாடை உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் அதை நிராகரிக்காதீர்கள். ஏனெனில் அது ஒரு எச்சரிக்கை மணியாகும். உங்களு டைய இடுப்பின் சுற்றளவு ஐந்து அங்குலம் அதிகரித்தால் நீங்கள் வாழ்க்கையில் தோற்று விடுவீர்கள். நவம்பர் 26 அன்று கடைப்பிடிக்கப் பட்ட உலக தொப்பை நாளில், உல கில் நடக்கும் மரணங்களில் 30 விழுக் காடு தொப்பை தொடர்புடைய வியாதிகளால் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை கொழு உடல் மருத்துவ இயல் கழகத்தின் இயக்குநரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன் இது பற்றி கூறும் போது, தொப்பை ஒரு வியாதி. முன்பு எடைஇழப்பு அறுவை சிகிச்சை ஒரு அழகியல் சிகிச்சையாக கருதப்பட்டது.

2006-07ம் ஆண்டுகளில் இதுவொரு ஆரோ க்கியம் தொடர்பான பிரச்சனையாகி விட்டது என்கிறார். இரண்டாம் வகை சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நெடுநாள் இதயவியாதி, அதிக கொழுப்பு, சுவாசக்கோளாறு கள் உடையவர்களுக்கு ஏற்படும் ஜீரணக்கோளாறுகளால் தொப்பை உண்டாகிறது. இந்தியாவில் ஆண்டு தோறும் எட்டாயிரம் கொழு உடல் அறுவைச் சிகிச்சைகள் உடல் எடை யைக் குறைப்பதற்காக நடத்தப்படு கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 40/50 அறுவைச் சிகிச்சைகள் தான் நடக்கின்றன என்று கொழு உடல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத் தம் போன்ற வியாதிகள் உடைய வர்களுக்கு உடல் நிறை குறியீட்டு (பிஎம் ஐ) எண் 35க்கு மேல் இருந்தால் அவர்கள் கொழு உடல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்றும் தொப்பை உடையவர்களின் குறியீட்டு எண் 40ஐத்தாண்டியிருந் தால் அவர்களும் இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

Tags: ,

Leave a Reply