சாஸ் கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஷிஹாஜூதீன் தயாரிக்கும் படத்தின் பெயரைக் கேட்டால் பேயைப் பார்த்ததுபோல் நீங்கள் மிரண்டு போகவும் வாய்ப்பிருக்கிறது.
அப்படி என்னங்க படத்தோட பேருன்னு கேக்குறீங்களா?
‘அருத்தாபத்தி’ என்பதே படத்தின் பெயர்.
அப்படீன்னா என்னாங்கோ அர்த்தம்? தமிழ்வார்த்தைதானா இது?
‘நாம் சொல்கிற வார்த்தைகளில் இருந்து நாம் சொல்லாத விஷயங்களையும் புரிந்து கொள்வது என்பதுதான் இதன் அர்த்தம். படம் பார்க்கும்போது தலைப்பு எத்தனை பொருத்தமானது என்பது உங்களுக்கு விளங்கும்‘ என்கிறார் இயக்குநர் சஜின் வர்கீஸ்.
மலையாளப் படவுலகின் முன்னணி இயக்குநரான வினயனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சஜின் வர்கீஸ், இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
மாறுபட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மைனா விதார்த் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக ‘கல்கத்தா அழகி’ ஐஸ்வர்யா தத் நடிக்கிறார்.
இவர்களுடன் தம்பிராமய்யா, மனோபாலா, தேவதர்ஷினி, ஆதிரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
வித்தியாசமான கதையமைப்போடு, பரபரப்பூட்டும் காட்சிகள் கொண்ட திகில் படமாக உருவாக இருக்கும் ‘அருத்தாபத்தி’ படத்தின் துவக்க விழா, அண்மையில் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்புடன் ஆரம்பமாகியது.
ஒளிப்பதிவு – நவாஸ்: இசை ‘லஜ்ஜாவதி’ பாடல் புகழ் ஜாஸிகிப்ட்: வசனம் – ரவி வர்மா: நடனம் – தினேஷ்; சண்டை – டி.ரமேஷ்; கலை – பி.ராஜீ: தயாரிப்பு – ஷிஹாஜூதீன், இயக்கம் – சஜின் வர்கீஸ்:
















