பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

perarivalan2ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகளான நா.ராஜாராமன், இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைச்செல்வன் ஆகியோரே ஜனாதிபதி அலுவலகத்தில் மறுபரிசீலனை மனுவை கையளித்துள்ளனர்.

குறித்த மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தப்பட்டது என விசாரணை அதிகாரியான தியாகராஜன் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருக்கும் அவரது கருணை மனுவின் மீது மறுபரிசீலனை மேற்கொண்டு பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் தூக்குத்தண்டனை குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply