வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் பட்ஜெட் நிறைவேறியது

budgetவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எந்த எதிர்ப்பும் இன்றி சபை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் நேற்று (19) நிறைவேறியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குரிய 2014 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்திற்கான இறுதி விவாதம் நேற்றைய தினம் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இவ் விவாதத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 7 பேரும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 3 எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆக 10 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சிறப்பானதாகவும் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் உள்ளதாக தெரிவித்து வாக்கெடுப்புக்கு விடாமல் ஏகமனதாக நிறைவேற்றினர்.

இதனை ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜோர்ஜ் வொசிங்டன் முன்மொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் வழிமொழிந்து நிறைவேற்றினார்.

Tags: ,

Leave a Reply