யாழ்.பல்கலை சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்

yarl-uni1யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மதியம் 3 மணியளவில் பல்கலைக்கழக வளவில் ஒன்று கூடிய அனைத்து வருட சட்டத்துறை மாணவர்கள் அனைவரும் பரீட்சை முடிவடைந்து ஒருவருடங்கள் நிறைவடைந்த போதும் எனது பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பதில் கலைப்பீடாதிபதி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தருவதாக உறுதிமொழி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
yarl-uni2

yarl-uni3

Tags: , ,

Leave a Reply