சனல் 4 காணொலிகள் போலியானவை : என்கிறார் ஜனாதிபதியின் ஆலோசகர்

lk-war-crimeஇலங்கைக்கு எதிராக சனல் 4 தயாரித்து வெளியிட்ட காணொலிகள் யாவும் போலியானவை என்று இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் பி.டபில்யூ.எப்பாசிங்க இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் தொழில்நுட்பம் எவ்வாறு பிழையான வழியில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளங்கப்படுத்தினார். சனல் 4 காணொளி இலங்கையை பொறுத்தவரையில் நாட்டின் இறைமைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சிலர் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைந்துள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இதேவேளை 2003 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தமை தொடர்பில் பிரித்தானியா மீது குற்றம் சுமத்தப்பட்ட போது பிரித்தானியா அதனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டு தடுத்தது என்றும் எப்பாசிங்க சுட்டிக்காட்டினார்.

Tags: , ,

Leave a Reply