இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

usa-flag2இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம், இந்து மற்றும் பௌத்த மதத்தவருக்கு இடையில் அடிக்கடி முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்;டுள்ள அறிக்கையில் இலங்கை நிலைமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தளங்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் 6000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் தொழில்களில் ஈடுபட மத்திய அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை, எனினும் சட்ட ரீதியற்ற முறையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத ரீதியான பதற்ற நிலைமை நீடித்து வரும் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு புகலிடக் கோரிக்கை அனுமதி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply