எதிர்வரும் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான ஊகத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில வேளைகளில் எதிர்வரும் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு எனவும், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறக் கூடுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் மீது சேறு பூசும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இவ்வாறான சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















