வவுனியா வெண்கல செட்டிகுள பிரதேசசபைச் செயலாளர் மீது விசாரணை

Vau-eng2தமிழ் தேசியக் குட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வெண்கல செட்டிகுள பிரதேசசபை நடவடிக்கைக்கு அச் சபையின் செயலாளர் இடையூறு விளைவிப்பதாகவும் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் உபதவிசாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து வடமாகாண ஆளுனர் அவர்களின் பணிப்பின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபையின் செயலாளர் திரு.இ.ம.யோகராஜா என்பவரால் பிரதேசசபைக்கு சொந்தமான பல வாகனங்கள், கணனி உட்பட களஞ்சிய பொருட்கள் சபையின் அனுமதியின்றி மிக நீண்ட நாட்களாக தனது சொந்த, குடும்ப பாவனையில் ஈடுபடுத்தி வந்தமை தொடர்பாக சபையின் உபதவிசாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட விசாரனை குழுவின் மூலம் குறித்த விடயங்கள் உண்மையென அம்பலத்திற்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த பொருட்கள் மேற்படி விசாரணை குழுவின் முன்னிலையில் கடந்த (19.12)அன்று பிரதேசசபை அலுவலகத்தில் பாரப்படுத்தப்பட்டது. இது குறித்த விசாரனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Vau-eng1

Vau-eng3

Tags: ,

Leave a Reply