மனிலா விமான நிலைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலி

manila-airportபிலிப்பைன்ஸ், மனிலா விமான நிலைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் நகரமொன்றின் மேயர் உள்ளிட்ட நான்கு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தென் நகரமான லாபான்கானின் மேயரான உகுல் தாலும்பேவே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விமான நிலையத்தில் காத்திருந்த மேலும் மூன்று பேரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

விமான நிலையத்தில் சனநெரிசல் நிறைந்த சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஒரு வயது குழந்தையொன்றும் கொல்லப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply