விஜய் சாதாரண நடிகராக இருந்தவரை நன்றாகத்தான் இருந்தார். அரசியல் ஆசை ஏற்பட்டு, முதலமைச்சர் கனவு காண ஆரம்பித்த பிறகு அநியாயத்துக்கு மாறிவிட்டார்.
பாத்ரூம் போவது தவிர மற்ற எல்லா விஷயங்களையுயும் மீடியாவைக் கூப்பிட்டு வைத்து கும்மியடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்.
பத்து ரூபாய்க்கு பள்ளிக்கூட மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதாக இருந்தாலும் சரி…பசு மாடு கொடுப்பதாக இருந்தாலும் சரி பல ஆயிரம் செலவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்.
அந்தளவுக்கு விஜய்யை விளம்பர வெறி ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. இதன் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணமும்தான்..!
தலைவா படத்தில் ஆளும்கட்சியால் சுண்ணாம்பு தடவப்பட்ட பிறகு சில மாதங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தார்.
பப்ளிசிட்டியில் ருசி கண்டுவிட்ட விஜய்யினால் சும்மா இருக்க முடியவில்லை…!
பேப்பரில் பேர் வர என்ன செய்யலாம் என்று யோசித்திருப்பார் போலிருக்கிறது.
ஆரம்பக்காலத்தில் தன்னை வைத்து படம் எடுத்த 5 தயாரிப்பாளர்களை அழைத்து ஆளுக்கு 5 லட்சம் கொடுத்து, அதன் மூலம் பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார்.
தன்னை வைத்து படம் எடுத்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்தான்.
அதை நாலு சுவருக்குள் கொடுக்க வேண்டியதுதானே? பல லட்சம் செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
”என்னை மாதிரி மற்ற ஹீரோக்களும் இதேபோல் தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும்”
– என்று கொளுத்திப் போட்டுவிட்டு கிளம்பிப்போனார்.
விஜய் சொல்கிறபடி மற்ற ஹீரோக்கள் எல்லாம், தன்னால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்றால்..
ஒவ்வொரு ஹீரோக்களின் வீட்டு முன்னால் ரேஷன்கடை போல் நீ……………………………….ண்ட க்யூ நிற்கும். பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்து ஆண்டியாய்ப்போனவர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள்.
இது விஜய்க்கு தெரியாதா?
தெரியும்.
தெரிந்தேதான் அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம், ஆர்யா, ஜீவா போன்ற தன் போட்டியளர்களுக்கு வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விஜய்.
நல்ல மனசுக்கார நடிகர்!?
















